ரியோ டி ஜெனிரோ: தப்பியோடிய தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரை இந்தியாவுக்கு அழைத்து வர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பிரதமர் மோடி மற்றும் புதிய பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இடையேயான இந்த சந்திப்பு ஜூலை மாதம் அவர் பதவியேற்ற பிறகு அவரது முதல் சந்திப்பு ஆகும்.
இந்த சந்திப்பின் போது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து முடிப்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ஜனவரியில் ஆரம்பித்து 14 சுற்றுகளாக நடந்த பேச்சுவார்த்தையில் இன்னும் பல விஷயங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இருப்பினும், ஒப்பந்தத்தை 2025க்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டது.
இது தவிர, சர்வதேச விவகாரங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியும், பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மேலும் விவாதித்தனர்.
இந்த சந்திப்பின் போது, வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிய விஜய் மல்லையா, 2016ல் பிரிட்டனில் இருந்து தப்பிச் சென்றதாகவும், லண்டன் சிறையில் இருக்கும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், ஜி-20 மாநாட்டின் போது, பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து முக்கிய உலகளாவிய விவகாரங்கள் மற்றும் சர்வதேச உறவுகளை ஆய்வு செய்தார்.