புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் பொதுமக்களிடம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ரங்கசாமியிடம் எதிர்க்கட்சி தலைவர் சிவா மனு அளித்துள்ளார். அந்த மனுவில், அரசு ஊழியர் மற்றும் அவரது கணவர், அவர்களது உறவினர்களுடன் அக்டோபர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை, கிராமப்புற மக்களிடமிருந்து.
ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ₹8,000 வட்டி தருவதாக உறுதியளித்து ₹15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளனர்.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட 150 பேர் பணத்தை மீட்க வந்தபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கடன் தொல்லையால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த மோசடி மூலம் வசூலான பணத்தை வேறு தொழிலில் முதலீடு செய்து சொத்துகளை குவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.