ஆப்பிரிக்கா: கிழக்கு ஆப்பிரிக்காவில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏரியின் தெற்கே உள்ள ருசிசி அணையில் நீரோட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தியும் பாதித்துள்ளது.
கிழக்கு ஆப்பரிக்காவில் உள்ள மிகப்பெரிய கிவு ஏரியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட பிற குப்பைகள் சேர்ந்ததால் காங்கோ நாட்டில் நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
கிவு ஏரியின் தெற்கு பகுதியில் உள்ள ருசிசி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை கொண்டு நீர் மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில் பிளைஸ்டிக் கழிவுகளால் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே படகுகள் மூலம் ஏரியில் சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடைபெறுவதாக தெரிவித்தனர்.