‘உடலை கட்டுக்கோப்பாக வைத்திருங்கள்’ – இதுதான் தற்போதைய தாரக மந்திரம்.
கடந்த தசாப்தத்தில் உடற்பயிற்சி பற்றிய தொடர்ச்சியான விழிப்புணர்வின் விளைவாக, ஜிம்கள் எல்லா இடங்களிலும் பெருகிவிட்டன. இதில், இரவில் ஒளிரும் விளக்குகளின் கீழ் ஒரு கண்ணாடி சுவர் அறைக்குள் மக்கள் தீவிரமாக உடற்பயிற்சி செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
நம் வீட்டில் கூட காலை அலுவலக வேலை காரணமாக இரவில் உடற்பயிற்சி செய்பவர்கள் இருக்கலாம். உடற்பயிற்சி ஆரோக்கியமானது. அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் உடற்பயிற்சிக்கு நேரம் முக்கியமல்லவா?
இரவு நேர உடற்பயிற்சி ஏற்கத்தக்கது என்று கூறும் மருத்துவர்கள் கூட சில எச்சரிக்கைகளை வழங்குகிறார்கள். சில ஆய்வுகள் சுயநினைவின்றி செய்யும் உடற்பயிற்சி தூக்கத்தை பாதிக்கும் மற்றும் உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றன.
மருத்துவர்கள் கூறுகையில்,”இரவில் உடற்பயிற்சி செய்வது நிச்சயம் தூக்கத்தை பாதிக்கும்.மேலும், உடல் வெப்பநிலையை அதிகரித்து, அட்ரினலின், எண்டோர்பின் ஹார்மோன்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது.
இதனால், உடற்பயிற்சிக்கு பின் தூக்கம் தாமதமாகும் என, மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அத்தகைய சூழலில் தூங்குவதற்கு முன் குளிர்ந்த நீரில் குளிப்பது நன்மை பயக்கும்.
2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், தூங்குவதற்கு 4 முதல் 5 மணி நேரத்திற்கு முன் மிதமான உடற்பயிற்சி தூக்கத்தை சீர்குலைக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
2019-ம் ஆண்டின் ஆய்வு, மாலையில் மிதமான உடற்பயிற்சி நமது தூக்கத்தை மேம்படுத்தும் என்று கூறுகிறது. அதே சமயம், மாலை நேரத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2023-ல் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், இரவில் நீடித்த உடற்பயிற்சி தூக்கத்தில் மோசமான விளைவைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது.