சீனா: தென்கிழக்கு சீனாவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு.. கிராமங்களில் புகுந்த தண்ணீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜியாங்ஷி மாகாணத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான போயாங் ஏரியில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. மீஜியாங் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுவட்டார கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள சோங்கிங் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.