வாஷிங்டன்: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்து, அமெரிக்க குடியுரிமை பெற்ற டாக்டர் ஜெய் பட்டாச்சார்யா, ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் சுகாதார கொள்கை பேராசிரியராக உள்ளார்.
தற்போது அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர் 2025 ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார்.அதன் பின் முக்கிய துறைகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க சுகாதாரத் துறையின் முக்கிய அமைப்பான தேசிய சுகாதார நிறுவனங்களின் தலைவராக ஜெய் பட்டாச்சார்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
கொல்கத்தாவில் பிறந்த ஜெய் பட்டாச்சார்யா ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முதுகலைப் பட்டமும் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தற்போது ஏழைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். மருத்துவ ஆராய்ச்சிக்காக ரூ. 4.2 லட்சம் கோடி முதலீட்டில் செயல்படும் மிகப்பெரிய அரசு நிறுவனமாக US National Institutes of Health உள்ளது.