திருவாரூர்: ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் சாயப்பட்டறை உள்ளிட்ட தொழிற்சாலைகளால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் பரிசோதனை நடத்தப்படும் என செயல்தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பரிசோதனை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் 18 வயது ஆண்களுக்கு வாய் புற்றுநோய் மற்றும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக முதல்வர் ஸ்டாலின் ரூ. 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார். முன்னதாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு விழாவில் அமைச்சர் சுப்ரமணியன் பங்கேற்று பேசுகையில், ”தற்போது காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் மற்றும் 2026-ல் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை கணக்கில் கொண்டு, 2,553 புதிய டாக்டர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்வை ஜனவரி 27-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்வை டாடா கன்சல்டன்சி நடத்துகிறது. இந்நிலையில் இந்த தேர்வை ஜனவரி முதல் வாரத்திலேயே நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான இறுதி முடிவு ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இந்த தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள் 2,553 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். அப்போது, தமிழகத்தில் ஒரு டாக்டர் பணியிடம் கூட காலியாக இருக்காது.