சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 130 கல்லூரிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் இன்று முதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இன்று நடைபெறவிருந்த தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு பகுதி நாகப்பட்டினத்தில் இருந்து 630 கி.மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 830 கி.மீ. மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வேதாரண்யம் பகுதியில் 50 மீட்டர் ஆழத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது. முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நவ., 28 முதல் டிச. 1 வரை ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்கால் மற்றும் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும், ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கனமழை காரணமாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.