சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலிலும், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடலிலும் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 0830 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
இது நாகப்பட்டினத்திலிருந்து தென்-தென்கிழக்கே 630 கி.மீ தொலைவிலும், திருகோணமலையிலிருந்து 340 கி.மீ தெற்கு-தென்கிழக்கேயும், புதுச்சேரியிலிருந்து 750 கி.மீ. காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.