புதுடெல்லி: கூட்டுறவு துறையில் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் வழிகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஐநா சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025ஐ டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அனைவருக்கும் வளம் பெருக கூட்டுறவுகள் என்ற தொனிப்பொருளில் வரும் 30-ம் தேதி வரை மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:- வீட்டுவசதி மற்றும் வங்கித் துறையிலும் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டில் சுமார் 2 லட்சம் வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. உலகில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. உலகில் ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர மரியாதை நிமித்தம் கூட்டுறவு நிறுவனங்கள் செழிப்பாக இருக்க வேண்டும். இதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.
தற்போது கூட்டுறவு வங்கிகளில் ரூ. 12 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையை வட்டப் பொருளாதாரத்துடன் இணைக்க வேண்டும். “கூட்டுறவுத் துறையில் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் வழிகள் குறித்து விவாதிக்க வேண்டும். மக்களை மையமாக வைத்து உலகம் வளர்ச்சியடைய வேண்டும்.
இதற்காக கூட்டுறவு இயக்கத்தை மேலும் வலுப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. கிராமங்களில் கூடுதலாக 12 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படுகின்றன,” என்றார்.