சாம்பார் செய்யும்போது புளிப்பு சுவை அதிகமாகிவிட்டால் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து அது கரையும் வரை கொதிக்க வைக்கவும். அவ்வளவு தான் சாம்பாரில் உள்ள புளிப்பு சுவை இப்போது குறைந்து சாம்பார் டேஸ்ட்-ஆக இருக்கும். சாம்பாரின் சுவையை அதிகரிப்பதற்கு குழம்பை இறக்கும்போது 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளலாம்
தேங்காய் ஓட்டில் இருந்து தேங்காயை தனியாக எடுப்பது சற்று கடினமான விஷயமாக இருக்கும். எனவே தேங்காயை கேஸ் அடுப்பின் மேல் வைத்து மீடியம் Flame-ல் வைத்து சூடாக்கவும். இடையில் தேங்காயை ஒரு இடுக்கி வைத்து திருப்பி விடவும்.
தேங்காய் முழுவதும் சூடாகி இருக்கும் பின் அடுப்பை அணைத்து ஆற விட்டு ஸ்பூன் வைத்து நெம்பினால் தேங்காய் தனியாக வந்துவிடும்.
கிச்சன் டிப்ஸ்: பூண்டின் தொலை எடுப்பதற்கு நிறைய நேரம் தேவைப்படும். சீக்கிரமாக பூண்டு தொலை உரிப்பதற்கு முதலில் பூண்டை ஒவ்வொரு பற்களாக தனித்தனியாக எடுத்து கொள்ளவும்.
பின்னர் அந்த பூண்டை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் சூடான தண்ணீரை ஊற்றி 3 நிமிடம் ஊறவைக்கவும் மூன்று நேரம் கழித்து பூண்டை உரித்தால் ஈசியாக உரித்து விடலாம்.
வெங்காய பக்கோடாவிற்கு மாவு செய்யும்போது அதில் வருத்த நிலக்கடலை பொடியை சேர்த்து மிக்ஸ் செய்தால் பக்கோடா மொறு மொறுப்பாக இருக்கும்.