சென்னை: தோலின் வறட்சித் தன்மையினைப் போக்கும் முலாம்பழ பேக் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தோலின் வறட்சித் தன்மையானது குளிர் காலத்தில் மிக அதிகமாகவே இருக்கும். அதனைச் சரிசெய்ய வாஸ்லினில் துவங்கி பலவகையான மாய்ஸ்ரைசிங்க் கிரீமைப் பலரும் பயன்படுத்துவது உண்டு. ஆனால் இப்போது நாம் அதற்கு இயற்கையான தீர்வினை எப்படிக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
முலாம் பழம்- 2 துண்டு
மையோனஸ்- 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
செய்முறை: முலாம் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் மையோனஸ் சேர்த்துக் கலந்தால் முலாம்பழ பேக் ரெடி. இந்த முலாம்பழ பேக்கினை கை, கால், முகம் என அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து கழுவி வந்தால் தோலின் வறட்சித்தன்மையானது சரியாகும்.