சென்னை: மாவட்ட, மாநில அளவிலான விற்பனைக் கண்காட்சிகள், கல்லூரிச் சந்தைகள், மதி அனுபவ அங்காடி, சிறுதானிய உணவகங்கள், மதி விற்பனைச் சந்தை, இயற்கைச் சந்தை, மத்தி மொபைல் விற்பனை வாகனம், அடுக்குமாடி குடியிருப்பு விற்பனைச் சந்தை போன்ற திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சுயஉதவி குழுக்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சமுதாய மக்களையும் சென்றடைகின்றன.
இதன் தொடர்ச்சியாக, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்காக, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 4 மண்டலங்களாகப் பிரித்து, சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மாவட்டத் தலைநகரங்களில் மண்டல இணையவழி சேவை முகாம் அண்மையில் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் Amazon, Flipkart, Meeso, India Mart, Jio Mart, Boom, and Gem போன்ற வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த முகாம்கள் மூலம் சுமார் 2,296 சுயஉதவி குழு தயாரிப்புகள் இ-காமர்ஸ் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இ-காமர்ஸ் விற்பனையை அதிகரிக்க மகளிர் சுயஉதவி குழுக்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் கூறியிருப்பதாவது:- இதுவரை, சுயஉதவிக்குழு பொருட்கள் இ-காமர்ஸ் தளங்கள் மூலம் ரூ. 24.48 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.