உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரன், இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷை எதிர்த்து விளையாடுகிறார். 14 சுற்றுகள் கொண்ட இந்த ஆட்டத்தின் முதல் சுற்றில் டிங் லிரன் வெற்றி பெற்றார்.
2-வது சுற்று டிராவில் முடிந்தது. 3-வது சுற்றில் 37-வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் இருவரும் தலா 1.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் ஒரு நாள் இடைவேளைக்கு பின் நேற்று 4-வது சுற்று நடைபெற்றது. குகேஷ் கருப்பு காய்களுடனும், டிங் லிரன் வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.
இந்தச் சுற்றை 5 முறை உலக சாம்பியனான இந்திய ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் திறந்து வைத்தார். 42-வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிந்தது. 4 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். 5-வது சுற்று ஆட்டம் இன்று நடக்கிறது.