டெல்லி: கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அப்போது நடந்த விசாரணையில் 1563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் ஜூன் 23-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும், அதில் பங்கேற்காதவர்கள் கருணை மதிப்பெண் வழங்கப்படுவதற்கு முன்பு இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை 7 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெற்றது. கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட 1563 பேரில் 813 பேர் பங்கேற்றதாக தேசிய தேர்வு முகமையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகளை http://exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.