தேவையான பொருட்கள்:
தேங்காய் – ½ மூடி
செம்பருத்தி மலர்கள் – 15-20
எலுமிச்சை பழம் – ½ மூடி
வரமிளகாய் – 5
பூண்டு – 5 பல்
கருவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையானது
இஞ்சி – 1 அங்குல துண்டு
தாளிக்க:
கடுகு – ¼ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ½ தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
கருவேப்பிலை – ஒரு சிட்டிகை
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
செய்முறை:
செம்பருத்தி பூவின் அடிப்பகுதியில் உள்ள தண்டை நீக்கி, இதழ்களை பிரித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, வெதுவெதுப்பான வரை சூடாக்கவும். பின் அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது கல் உப்பு சேர்த்து செம்பருத்தி இதழ்களை நன்றாக கழுவவும். இது பூவில் இருக்கும் சிறிய பூச்சிகள் அல்லது எறும்புகளை அகற்றும். சுத்தமான தண்ணீரில் மீண்டும் அலசவும். பின் செம்பருத்தி இதழ்களை தண்ணீர் இல்லாமல் காய வைக்கவும். பூண்டின் தோலை நீக்கி தனியாக வைக்கவும். தேங்காயை துருவி அல்லது நறுக்கி தனியாக வைக்கவும். எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கவும். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். பிறகு சுத்தம் செய்த செம்பருத்தி பூ இதழ்கள், பூண்டு, இஞ்சி, காம்பு நீக்கிய சிவப்பு மிளகாய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். பிறகு அதில் கறிவேப்பிலை, தேங்காய் துருவல், எலுமிச்சை சாறு சேர்க்கவும். கடைசியில் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். இப்போது கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வதக்கவும். பின்னர் அதில் பச்சை கறிவேப்பிலை சேர்க்கவும். உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இறுதியாக, பெருங்காயத்தை சட்னியுடன் சேர்க்கவும், சுவையான செம்பருத்தி பூ சட்னி தயார்!