சென்னை: தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
#அதன்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
#வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு, பொது நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
#நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகத்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
# சுற்றுலாத்துறை செயலாளராக இருந்த மணிவாசன், நீர்வளத்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.
# தமிழ்நாடு செய்தித்தாள் தொழில்துறையின் நிர்வாக இயக்குநராக முன்னாள் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.
# பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் தற்போது இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
#புதிய பொதுப்பணித்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
# ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார், வனத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
# நெடுஞ்சாலைத்துறை செயலாளராக செல்வராஜ் நியமனம்.
# தமிழக அரசின் கேபிள் டிவி இயக்குநராக இருந்த ஜான் லூயிஸ், தற்போது தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
# இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநராக விஜயலட்சுமி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
# வெங்கடாசலம் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசு காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
#நிலச் சீர்திருத்தத் துறை ஆணையராக ஹரிஹரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
# போக்குவரத்து துறை சிறப்பு செயலாளராக லில்லி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
# தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக சாய் குமார் ஐஏஎஸ் நியமனம்.
# செய்தித் துறை இயக்குநர் வைத்தியநாதன் ஐஏஎஸ்-க்கு தமிழ்நாடு கேபிள் டிவியின் நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
# சமூக சீர்திருத்தத் துறை செயலாளராக ஜவஹர் ஐஏஎஸ் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.