திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் மலையடிவார வீடுகள் மீது சரிந்து விழுந்த மண் மற்றும் கற்களால் இடிபாடுகளில் 7 பேர் சிக்கினர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை வ.உ.சி நகரில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது மண், மரம், கற்கள் விழுந்ததில் ஒரே வீட்டில் வசித்த ஏழு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
மலைமீதிருந்து ராட்சத பாறையுடன் அருவிபோல் வழிந்து ஓடி வந்த மண், மரங்களையும் கற்களையும் இழுத்துக் கொண்டு வந்து வீடுகள் மீது கொட்டியது. இரவு நேரம் என்பதாலும் சேறும் சகதியுமாக இருந்ததாலும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
மீட்புப் பணிக்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளனர்.