
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:- தற்போது, விசாகப்பட்டினம், மர்மகோவா, நியூ மங்களூர், கொச்சி, மும்பை மற்றும் சென்னை ஆகிய 6 முக்கிய துறைமுகங்களில் நீர்வழி சுற்றுலா திட்டங்கள் உள்ளன.
நீர்வழி சுற்றுலாத் திட்டத்தின் மூலம் 2029-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீர்வழி சுற்றுலா கப்பல்களை இயக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டினருக்கு உத்தேச வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, நிதி (எண். 2) சட்டத்தின் (2024) கீழ், வருமான வரிச் சட்டத்தில் (1961) 44 பிபிசி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நீர்வழி சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு சமீபத்தில் பாரத் நீர்வழி சுற்றுலாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதன்படி கடல்சார் சுற்றுலா முனையங்களின் எண்ணிக்கையை 10 ஆகவும், நதி சுற்றுலா முனையங்களை 100 ஆகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.