மும்பை: ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிங்க் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் விளையாடி வருகிறது.
இதில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணி 240 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. இந்த பயிற்சி ஆட்டத்தில் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், கில், நிதிஷ் ரெட்டி ஆகியோர் அபாரமாக விளையாடிய நிலையில், கேப்டன் ரோகித் சர்மா மட்டும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த போட்டி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “இந்த போட்டி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு அணியாக நாங்கள் விரும்பியதை நாங்கள் பெற்றோம் என்று நினைக்கிறேன். நாங்கள் முழு ஆட்டத்தையும் பெறாதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், கிடைத்த நேரத்தை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோம். இது எங்களுக்கு தேவையான பயிற்சியை அளித்துள்ளது.
பயிற்சி போட்டிக்கு வந்திருந்த 5,000 ரசிகர்களிடம் கேட்டதற்கு, “இவ்வளவு ரசிகர்கள் வந்து எங்களுக்கு ஆதரவளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்து விளையாடும் போதெல்லாம் கூட்ட நெரிசல் இருக்காது” என்று ரோஹித் சர்மா கூறினார்.