சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் நேற்று மாலை நடந்த விழாவில், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 1,200 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் ஆணைகளையும், 963 செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
கொரோனா காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டது. தேசிய சுகாதார ஆணைய இயக்குனர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனர் ராஜமூர்த்தி, கூடுதல் இயக்குனர் சித்ரா உத்தோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ”திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், சுகாதாரத் துறையில் டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் என மொத்தம் 20,440 பேருக்கு பணி நியமனம் செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.”