கிருஷ்ணகிரி: ஏரிகள் நிறைந்தது… ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரிகள் நிறைந்தது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பிய நிலையில், கல்லூர் ஏரி, பரசனேரி உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறிய வெள்ளம் ஊத்தங்கரையை சூழ்ந்துள்ளது.
பரசனேரி ஏரி நிரம்பி சேலம் – திருப்பத்தூர் சாலையில் வெள்ளம் பாய்வதால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
முனியப்பன் கோயில் அருகே உள்ள மேம்பாலத்தின் மேலும் வெள்ளம் செல்வதால், ஊத்தங்கிரி – கிருஷ்ணகிரி சாலை உள்பட பல்வேறு கிராம சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.