சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 1,500க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் 99 சதவீதம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பதிவுகள் பாதுகாக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆக்கிரமிப்புகளை தடுக்க சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், பதிவேடுகளை பாதுகாக்கவும் தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பான விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் நிஜாமுதீன் 2020ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை மற்றும் மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் திருடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் 99 சதவீதம் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பதிவுகள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.