அரசால் தடைசெய்யப்பட்ட தேளி மீன்கள் பார்பதற்கு பளபளப்பாகவும், எடை அதிகமாகவும் இருக்கும். இந்த தேளிமீன்கள் சட்டவிரோதமாக தற்போதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி விற்பனை செய்யப்படும் இந்த மீன்களை எப்படி கண்டுபிடிப்பது, அதனை வாங்காமல் தவிப்பது எப்படி, அவ்வாறு வாங்கி சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
தேளை விட அதிக விஷம் உடைய ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட மீன் இனம் தான் இந்த தேளி மீன். மேல் பகுதியில் கருமை நிறமும், கீழ் பகுதியில் ஈய வெண்மை நிறத் தோற்றத்தினை கொண்ட இவை விஷ மீன் வகைகளை சார்ந்தவை. மீன் மார்க்கெட்களில் எடை அதிகமாகவும், விலை மலிவாகவும் கிடைப்பதால் இதனை பற்றி அரியாத மீன் பிரியர்கள் இந்த மீன்களை வாங்கி உண்டு ஆபத்தினை சந்திக்கின்றனர்.
இந்த தேளிமீன்கள் பற்றியும், இதனை உணவாக எடுத்தால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றியும், சந்தைகளில் மீன்களுடன் விற்பனை செய்தால் கண்டறியும் வழிமுறைகள் பற்றி விளக்கும் அளித்துள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். தேளிமீன்கள் இந்தியாவில் வளரும் மீன் இனங்கள் அல்ல. ஆப்பிரிக்காவில் வாழும் மீன் இனமாகும். இதனால்தான் ஆப்பிரிக்கன் கேட் ஃபிஷ் என்று அழைக்கப்படுகிறது.பிரம்மபுத்திரா நதியில் விடப்பட்ட தேளிமீன் அதன் மூலம் ஒவ்வொரு நீர்நிலைகளுக்கும் சென்று நாடு முழுவதும் பரவியது.
பொதுமக்கள் சிக்கன், மட்டன் போன்றவை உட்கொண்டால் கொழுப்பு என்று நினைத்து எந்தவொரு கலப்படமும் இல்லாத மீன் புரதச்சத்து நிறைந்த மீன்களை உணவாக எடுத்துக் கொள்கின்றனர். இதனை பயன்படுத்தி அரசால் தடை செய்யப்பட்ட தேளிமீன்களை மக்களிடம் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
தேளிமீன்களின் உணவு முறை என்பது முழுவதும் அசைவ உணவுகளை தான் உள்ளது. நீர்நிலைகளில் கோழி, ஆடு, மாடு போன்ற இறைச்சி கழிவுகளை தீவனமாக உட்கொண்டு வாழ்கின்றன. இதனால் அதிக எடையுடன், மினுமினுப்பாகவும் காணப்படும் ஒரு மீன் மூன்று கிலோவில் இருந்து 25 கிலோ வரை வளரும் தன்மையுடையது. தேளி மீன் மற்ற மீன்களை விட பெரியதாக இருக்கும். இதன் செவுல் மற்றும் செதில் பகுதிகளும் தூக்கி பார்க்கும் போது கடினமாக இருக்கும். கெளுத்தி மீனைப்போல வாய்பகுதியின் அருகில் அதிகளவில் மீசை போன்ற காணப்படும், எடையும் அதிகமாக இருக்கும்.
இதனை உட்கொண்டால் தோள் சம்பந்தமான நோய்கள், இதயம் சம்பந்தப்பட்ட நோய், ஆண்மைக்குறைவு, போன்ற அதிதீவிரமான நோய்கள் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும். இதனால் இந்த வகை மீன்களை கண்டறிந்து விற்பனை செய்வது தெரியவந்தால் உணவு பாதுகாப்புத்துறையின் 9444042322 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.