சென்னை: குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தமிழில் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஹிந்தியில் தமிழை விட அதிகமான படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தி, மராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ளார்.
மேலும், அரசியல் ரீதியான கருத்துக்களையும் வெளிப்படையாக பேசுபவர். துணிச்சலான நடிகையான ராதிகா ஆப்தே சில படங்களில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சியளித்தார். ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்துள்ள இவர், இப்போது இந்திய அளவிலும் உலகளவிலும் பிரபலமான நடிகையாக உள்ளார்.
சர்ச்சை நடிகையான ராதிகா ஆப்தே, பெனடிக் டெய்லர் என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து 12 ஆண்டுகள் கழித்து ராதிகா ஆப்தே, கடந்த அக்டோபர் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.
இந்நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். குழந்தையின் பாலினத்தை ராதிகா ஆப்தே வெளியிடவில்லை. ஆனால் அவரது நண்பர் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளார்.