தேவையான பொருட்கள்:
புதினா – 1 கப்
எலுமிச்சை – 1
துருவிய தேங்காய் – ¼ கப்
கடுகு, எள் எண்ணெய் – தேவைக்கேற்ப.
உப்பு – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 3

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாயை வதக்கி, புதினாவையும் வதக்கி, தேங்காய், உப்பு சேர்த்து அரைத்து, எலுமிச்சை சாறு, கடுகு சேர்த்து கலந்து பரிமாறவும். புதினா மற்றும் எலுமிச்சை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை தரும். சளி மற்றும் இருமலை கட்டுக்குள் வைத்திருக்கும்.