அமெரிக்கா: பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து ஜாகிர் உசேனின் நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா தெரிவித்துள்ளதாவது:
73 வயதான அமெரிக்காவில் வசித்து வந்த ஜாகிர் உசேனுக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஜாகிர் ஹுசைனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஒரு வாரமாக ஜாகிர் உசேன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார. உடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சாகிர் உடல்நிலை குறித்து அவரது நண்பர் ராகேஷ் கூறுகையில், “அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.