டெல்லி: கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து புறப்படும் விமானங்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கும், உள்நாட்டு விமானங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, பல மணி நேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதனால் பல விமான நிறுவனங்களின் சேவைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் விமானம் தரையிறங்குவதற்கான எரிபொருள் செலவு, விமான நிலைய கட்டணம், பயணிகளுக்கு இழப்பீடு என ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, சிவில் விமானப் பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்யுமாறு மத்திய அரசிடம் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். மேலும், சமீபத்தில் இந்தியாவில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து சட்டம் திருத்தப்பட்டது.
புதிய சட்டத் திருத்தத்தின்படி, 1 லட்சம், ரூ. 50 லட்சம், ரூ. 75 லட்சம் மற்றும் ரூ. 1 கோடி அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 14 வரை விமானங்களுக்கு 999 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. அக்டோபர் மாதத்தில் மட்டும் 666 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.