பிரிஸ்பன்: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி பிரிஸ்பனில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது.
இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, கே.எல்.ராகுல், ஜடேஜா, ஆகாஷ் தீப் ஆகியோரின் ஆட்டத்தால் ஃபாலோ-ஆன் தவிர்க்கப்பட்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா துரத்தியது. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், மழையால் ஆட்டம் டிரா ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் தலா 4 ரன்கள் எடுத்தனர். தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது.