சென்னை: மலையாள முன்னணி நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு நடித்த முரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார் சுராஜ் வெஞ்சரமூடு. இவர் தற்பொழுது சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இதுவே இவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாகும்.
இந்நிலையில் சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாள இயக்குனரான முகமத் முஸ்தஃபா இயக்கத்தில் `முரா’ மலையாள திரைப்படம் உருவாகி கடந்த நவம்பர் 8 ஆம் தேதி வெளியானது .
இப்படம் ஒரு கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஹ்ரிது ஹரூன் , மாலா பார்வதி, கனி கஸ்தூரி, கண்ணன் நாயர், ஜோபின் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரியா ஷிபுவின் HR பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் முரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இயக்குனரான முஸ்தஃபா இதற்கு முன் அன்னா பென் நடிப்பில் வெளியான தேசிய விருதைப்பெற்ற கப்பேலா திரைப்படத்தை இயக்கியவராவார்.