சென்னை: பிரதமருக்கு நன்றி… வரும் 2025ம் ஆண்டு பயிர் பருவத்தில் கொப்பரை ஆதார விலையை உயர்த்தி வழங்கிய பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
வரும் 2025 ஆம் ஆண்டு பயிர் பருவத்தில், அரவைக் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ரூ.11,582 ஆகவும், பந்து கொப்பரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.12,100 ஆகவும் உயர்த்தி வழங்கியதற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக
மற்றும் தமிழக தென்னை விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாட்டில் 25.7% தென்னை உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் உள்ள நிலையில், குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்கியிருப்பது, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.