சென்னை: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் 25-வது வெள்ளி விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் அண்ணா நூலகத்தில் கலைக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஓவியக் கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். அதன்பின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
இணையதளத்திற்கு பள்ளிக் கல்வித்துறை கட்டணம் செலுத்தாதது தவறு. மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்பு கட்டணத்தை நிலுவையில் வைத்திருக்க தேவையில்லை. மத்திய அரசு கட்டணத்தை நிலுவையில் வைத்துள்ளது. அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கு அவை தடையாக இருக்கின்றன. மும்மொழிக் கொள்கையை ஏற்கும்படி மத்திய அரசு வற்புறுத்துகிறது.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் அரை மணி நேரத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்குவோம் என்கிறது மத்திய அரசு. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றினால், நம் மாணவர்கள் தங்களுக்குத் தேவையானதைச் செய்ய முடியும், நாங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. எனவேதான் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசிடம் ஒரு ரூபாய் கொடுத்தால், 29 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த 29 பைசாவை என்ன செய்வோம்? இவ்வாறு அவர் கூறினார்.