அரிசோனா: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை வெளிப்படையாக ஆதரித்த எலோன் மஸ்க், அவரது பிரச்சாரத்திற்கு உதவுவதற்காக 2,000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தார். மேலும், பல தளங்களில் டிரம்பிற்கு ஆதரவாக எலோன் மஸ்க் பிரச்சாரம் செய்தார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் எலோன் மஸ்க் அமைச்சரவையில் இடம் பெறுவார் என டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு அமெரிக்க அரசின் எரிசக்தி துறை தலைவர் பதவி வழங்கப்பட்டது.
அடுத்த அதிபர் ட்ரம்பின் புதிய நிர்வாகத்தில் மஸ்க்கிற்கு அதிக இடம் கொடுக்கப்பட்டதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் பதவியை எலான் மஸ்க்கிற்கு விட்டுக் கொடுக்கப் போவதாக வெளியான தகவலை டிரம்ப் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
அரிசோனாவில் நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் பேசிய அவர், எலோன் மஸ்க் அமெரிக்காவில் பிறக்கவில்லை, எனவே அவரால் கண்டிப்பாக அதிபராக முடியாது என்று கூறினார். சமூக வலைதளங்கள் தவறான செய்திகளை பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்க அரசியல் சாசனத்தின்படி அந்த நாட்டில் பிறந்தவர்கள் மட்டுமே அதிபராக முடியும். தென்னாப்பிரிக்காவில் பிறந்ததால் எலோன் மஸ்க் அமெரிக்க அதிபராக முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.