ராஜஸ்தான்: ராகுல் காந்திக்கு எதிராக மோடி பயன்படுத்திய வார்த்தைகள் விரக்தியின் அடையாளம் என ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று ராகுல் காந்தி பேசினார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக பேசினார். மேலும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். பாஜகா, ஆர்எஸ்ஸ் ஆகியவற்றையும் கடுமையாக சாடினார்.
தங்களை இந்துக்கள் என சொல்லிக் கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பை ஊக்குவிக்கிறார்கள். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அல்லது மோடி ஒட்டுமொத்த இந்துக்களை பிரநிதித்துவம் படுத்ததுபவர்கள் அல்ல. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி பேசினார். தற்போதைய காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுண்ணி என கடுமையாக விமர்சித்தார். அத்துடன் ராகுல் காந்திக்கு குழந்தை புத்தி என கிண்டல் செய்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு எதிராக மோடி பயன்படுத்திய வார்த்தைகள் விரக்தியின் அடையாளம் என ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அசோக் கெலாட் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக பிரதமர் மோடி நேற்று மக்களவையில் பயன்படுத்திய வார்த்தைகள் விரக்தியின் அடையாளம். பிரதமர் தனது பதவியை பற்றியோ, சபையின் கண்ணியத்தை பற்றியோ கவலைப்படவில்லை என்று தெரிகிறது, இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
மேலும், “அவருடைய விரக்தி மக்களுக்கு தெரிய வந்துள்ளதால், அவர் பெரியதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மக்களவை தேர்தலின்போது மங்கள்சூத்ரா, ஊடுருவல் குறித்து பேசினார். இது ஜூன் 1-ந்தேதி தேர்தல் முடியும் வரை எதிர்மறையாக விவாதிக்கப்பட்டது. இது பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணம்” என்றார்.