திருவண்ணாமலை, கோவை, ராமநாதபுரம் மாவட்ட பாஜக அலுவலகங்களை திறந்து வைத்து அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா, நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளார். மறுநாள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்கிறார்.
அங்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார். கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட அலுவலகங்களையும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமித் ஷாவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அமித் ஷா சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.
பிரதமரை சந்திக்க கவர்னர் டெல்லி சென்றுள்ள நிலையில் அமித்ஷா தமிழகம் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழக பாஜகவில் உள்கட்சி தேர்தல் தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டணி குறித்து அவர்களிடமும் கருத்து கேட்பார். முன்னதாக, நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தபோதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. மேலும், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. ரயில் மறியல், அமித்ஷா உருவபொம்மையை விவிஐபி எரித்தது போன்ற சம்பவங்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறின. மேலும் அவர் தமிழகம் வரும்போது (டிசம்பர் 28) சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே அவரை கண்டித்து அம்பேத்கர் பெயரை ஆயிரம் முறை முழங்க விவிஐபி போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.