சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- வரும் பண்டிகைகளை கருத்தில் கொண்டு மேங்கோ மற்றும் கிரேப் டூயட் வகைகளை 2 வாங்கினால் ₹10 தள்ளுபடியில் விற்பனை செய்ய ஆவின் திட்டமிட்டுள்ளது.
ஐஸ்கிரீம் ரகங்களை விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் மொத்த விற்பனையாளர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, ஐஸ்கிரீம் விற்பனையில் ஆர்வமுள்ள தொழில்முனைவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.aavinmilk.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான தொடர்பு எண்: 9043099905.