சென்னை: இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பாடத்திட்ட விவரங்களை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் மூலம் நடத்தப்படுகிறது.
அதேபோல் ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையால் (NTA) ஆண்டுதோறும் NEET நடத்தப்படுகிறது. அதன்படி, 2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
நீட் தேர்வில் 180 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். தாவரவியல் மற்றும் விலங்கியல் உள்ளிட்ட உயிரியலில் 360 மதிப்பெண்களும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களும் வழங்கப்படும். இந்நிலையில், நீட் தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்கள் https://www.nmc.org.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கேள்விகள் பின்வரும் அடிப்படையில் இருக்கும்.