லெபனான்: இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் மூன்று பிராந்தியங்களில் ஒன்றிற்கு தலைமை ஏற்ற முகமது நாமேஹ் நாசர் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் உள்ள பல ராணுவ தளங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத அளவிற்கு நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கருதப்படுகிறது. இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்த ஏராளமான ஏவுகணைகள் மற்றும் வான்வழி இலக்குகளை இடைமறிக்கப்பட்டது. இது தொடர்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதா? என்பது குறத்து உடனடி தகவல் ஏதும் இல்ல என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடுமையான வெடிபொருட்கள் நிரப்பிய கட்யுஷா ராக்கெட்டுகள், ஃபலாக் ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் பல்வேறு தளங்களை குறிவைத்து வெடிக்கும் டிரோன்களையும் செலுத்தியுள்ளது. மேலும் வியாக்கிழமையும் ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.