தேவையான பொருட்கள்:
கோழிக்கறி (எலும்புடன்) – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்
பட்டை, லவங்கம் – தலா 1
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி தனியாத்தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி உப்பு, எண்ணெய் – தேவையான அளவு கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை:
முதலில் சிக்கனை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பிறகு, அதில் பட்டை மற்றும் லவங்கம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கி வந்த பின்னர் அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, பின் அடுப்பில் இருந்து கடாயை இறக்கி விட வேண்டும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து அதில் மஞ்சத்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து மசாலாக்களின் காரத்தன்மை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். இப்போது கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து அதில் உப்பு போட்டு நன்றாக கிளறி விட வேண்டும்.. அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சுமார் 5 -6 விசில் வரை வைத்து வேக வைக்க வேண்டும். 6 விசிலுக்கு பின் குக்கரை அடுப்பில் இருந்து விட்டு இறக்கி வைக்க வேண்டும்.. இதில் இறுதியாக மல்லித்தழை தூவி பரிமாறினால் அருமையான சிக்கன் சூப் ரெடி..