சென்னை: சிபி சத்யராஜின் டென் ஹவர்ஸ் படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது.
அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் அன்று வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
பொங்கல் ரேஸில் இருந்து விடாமுயற்சி திரைப்படம் விலகியதை அடுத்து பொங்கல் விடுமுறையை குறிவைத்து பல புதிய படங்கள் களமிறங்கியுள்ளன.
சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிபிராஜ் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.