சென்னை: பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார் என்று சீமான் பேச்சுக்கு அண்ணாமலை ஆதரவு அளித்துள்ளது அரசியல் அரங்கில் பேசும் பொருளாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், பெரியார் பேசாததை சீமான் பேசியதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், “பெரியார் பேசியதை தான் சீமான் பேசியுள்ளார் என்றும் அதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயார் என்றும் சீமான் தெரிவித்தார். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சீமானுக்கு ஆதரவாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் சீமான், “பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் சம்பந்தமில்லை. பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியாருக்கு கொள்கையே இல்லை. வள்ளலாரை விட பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்து விட்டார்?” என்றும் பேசினார்.
இதுகுறித்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அண்ணாமலை, “பெரியார் பேசியதாக சீமான் கூறியதை எந்த புத்தகத்தில் பெரியார் எழுதியுள்ளார் என்பதை ஆதாரத்துடன் வெளியிட தயார். சீமான் வீட்டுக்கு காவல்துறையினர் வந்தார்கள் என்றால், அந்த புத்தகத்தின் நகலையும் நான் காண்பிக்கத் தயார். பெரியார் பேசியதை தற்போது பொதுவெளியில் கூற முடியாது. சீமான் பேசியது சரி என்று நான் கூறவில்லை. ஆனால் பெரியார் பேசியிருக்கிறாரா என்று கேட்டால், பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களை வெளியிடத் தயார்,” என்று கூறியுள்ளார்.
சீமானுக்கு ஆதரவாக அண்ணாமலை பேசியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது அரசியல் அரங்கில் பேசும் பொருளாகி உள்ளது.