சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். நேற்று வழக்கமாக இயக்கப்பட்ட 2,092 பேருந்துகளுடன், 2,015 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 4,107 பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதைத் தொடர்ந்து மாட்டுப்பொங்கல் (ஜனவரி 15) மற்றும் காணும்பொங்கல் (ஜனவரி 16) ஆகியவை வருகின்றன. இதைத் தொடர்ந்து, ஜனவரி 17-ம் தேதியை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 18-ம் தேதி சனிக்கிழமை மற்றும் 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. குறிப்பாக தென் மாவட்ட மக்கள், கல்வி மற்றும் வேலை காரணமாக சென்னையில் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்கள் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர்.
இதன் காரணமாக, சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு தினமும் 5,736 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் 44,580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பொங்கல் விடுமுறை காரணமாக கடந்த 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்துத் துறை தனது X இணையதளத்தில் கூறியிருப்பதாவது:- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பேருந்துகளின் இயக்கம், நேற்று நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்பட்ட 2,092 பேருந்துகளில், 2,092 பேருந்துகள் மற்றும் 2,015 சிறப்புப் பேருந்துகள், 4,107 பேருந்துகளில் 2,25,885 பயணிகளை ஏற்றிச் சென்றன. 10.01.2025 முதல் 11.01.2025 நள்ளிரவு 12 மணி வரை, 7,513 பேருந்துகளில் 4,13,215 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.