சென்னை: வாழ்த்து பெற்றார்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொங்கல் வாழ்த்தை துணை முதலமைச்சர் உதயநிதி பெற்றார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி பொங்கல் வாழ்த்து பெற்றார்.
இது தொடர்பாக உதயநிதி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் – அன்னையாரிடமும், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு குடும்பத்தாருடன் இன்று காலை வாழ்த்து பெற்றோம்.
நம் பண்பாட்டுத் திருநாளாம் பொங்கல் பண்டிகையைப் போற்றி மகிழ்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.