யாரையும் கட்சியில் சேர்க்காத எடப்பாடி பழனிச்சாமிக்கு, கட்சி அவரது தந்தை வீட்டின் சொத்து அல்ல. அது அதிமுக தொண்டர்களின் சொத்து என்று கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் முன்னாள் எம்பிகேசி பழனிசாமி இன்று ஆஜரானார்.
வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, நீதிமன்றத்திற்கு வந்த கே.சி.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 13-ம் தேதி என் மீது அவதூறாக பேசியதை அடிப்படையாக வைத்து எடப்பாடி பழனிசாமி மீது கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
* கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை 2014-ல் பெற்ற வாக்குகளை விட திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் குறைவான வாக்குகளைப் பெற்றதாக திரு.எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியில் இருக்கிறார்.
அ.தி.மு.க.,வின் ஓட்டு, தி.மு.க.,வுக்கு சென்றுள்ளது. கோவையிலும் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய நினைக்கும் அனைவரையும் அரவணைத்துச் செல்வது நல்லது. ஜானகி அம்மா உடல்நிலை காரணமாக விலகினார். பிரிந்திருந்த அனைவரையும் ஒருங்கிணைத்தார். அந்த பொறுப்பை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.
லைக்குகளுக்காக அந்த மாதிரி வீடியோ எடுப்பது தவறு;
எடப்பாடி பழனிசாமி இன்றும் கிளைச் செயலாளர் மட்டத்தில்தான் செயல்படுகிறார். யாரையும் மனதுடன் அரவணைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை. அரசியல் அறியாமையால் பேசுகிறார். ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சசிகலாவை முதலில் சந்திக்க உள்ளோம். யாரையும் கட்சியில் சேர்க்காததற்கு கட்சி எடப்பாடி பழனிசாமியின் தந்தை வீட்டின் சொத்து அல்ல. அ.தி.மு.க தொண்டர்களின் சொத்து. அதிமுகவை வழிநடத்த எடப்பாடி பழனிசாமி தகுதியற்றவர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும் என்றார்.