சென்னை: சமையல் எண்ணெய்களை அடிக்கடி மாற்றுவது நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக அனைவரும் ஒரே மாதிரியான சமையல் எண்ணெயையே பயன்படுத்துவார்கள். ஆனால் இது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். பல்வேறு ஊட்டச்சத்துக்களைப் பெற சமையல் எண்ணெய்களை அடிக்கடி மாற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது.
எள் எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய் என மாறி மாறி பயன்படுத்தப்படுவது அவசியம் என கூறப்படுகிறது. அதே போல் அளவுக்கு அதிகமாக எண்ணெய் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உடலை சீரான வெப்பநிலையில் வைக்கவும், உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்யை அடிக்கடி தேய்த்து குளிக்க வேண்டும்.
வாரத்தில் ஒருமுறை நல்லெண்ணெய்யை கண், மூக்கு காதுகள், உச்சந்தலை, தொப்புள், அடி வயிறு பாகங்களிலும், கால் பெருவிரல் பகுதியிலும் நன்கு தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரத்திற்கு பிறகு குளித்து வருவது பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.