ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் முன்னாள் எம்.எல்.ஏவும், மாவட்ட அவை தலைவருமான ராமஜெயலிங்கம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைப்பதற்கு அனைவரும் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து பேரணியாக சென்றனர். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கழகச் செயலாளர்கள் விக்கிரமபாண்டியன், கல்யாணசுந்தரம், நகர செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.