சென்னை: பெண்களுக்கு இப்போது ஆடை, ஆபரணங்களில் மட்டுமல்ல, விதவிதமான செருப்புகள், ஷூக்கள் மீதான ஆசையும் அதிகரித்து வருகிறது. எந்த பொருளையும் ஒன்றுக்கு பத்து முறைக்கு அலசி ஆராய்ந்து வாங்கும் குணம் பெண்களுக்கு இயற்கையாகவே இருப்பதால், அவர்களின் எண்ணங்களுக்கும், கனவுகளின் வண்ணங்களுக்கும் ஏற்ப விதவிதமான டிசைன்களில் செருப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன.
பொதுவாக, எல்லா செருப்புகளுமே பார்பதற்கு அழகாக இருக்கும். செருப்புகளின் அழகை பார்க்காமல், தங்கள் உடல் அமைபுக்கு ஏற்றவாறும், அணியும் உடைக்கு ஏற்றவாறும், ஆரோக்கியத்துக்குரியதாகவும் அதை தேர்வு செய்வது அவசியம்.
செருப்பு அணியும்போது, அதற்கு பொருத்தமாக ஆடையை தேர்வு செய்வது முக்கியம். கறுப்பு அல்லது டார்க் கலர் ஆடையை அணிந்துகொண்டு, பிரவுன், சந்தன நிற செருப்புகளை அணிந்தால் பொருத்தமாக இருக்காது. அதேநேரம், கறுப்பு அல்லது டார்க் நிற செருப்பை அணிந்துகொண்டால் பொருத்தமாக இருக்கும்.
பெண்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இன்றைய புட்வேர் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை, ஆடைகளில் மட்டுமே காணபட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இடம்பெறுகின்றன. இன்றைய நாகரீக மங்கையர் அதிகம் விரும்பி தேர்வு செய்வது, எம்ராய்டரி வேலைகள் காணப்படும் இந்த செருப்புகளைத்தான்.
எம்ராய்டரி வேலைகள் காணப்படும் செருப்புகளை உருவாக்குவதற்கு என்றே தனி டிசைனர்கள் உள்ளனர். இவர்களின் கை வண்ணத்தில் பல புதிய மாடல்களில், புதிய டிசைன்களில் எம்ராய்டரி வொர்க் செருப்புகள், ஹீல்ஸ்கள் தயாராகி விற்பனைக்கு வருகின்றன.
இன்றைய ஹீல்ஸ் மற்றும் எம்ராய்டரி செருப்புகள் பற்றிய விவரங்களை நடிகைகளை பார்த்துதான் பலரும் தெரிந்துகொள்கிறார்கள். சினிமா காட்சிகளில் தோன்றும் நடிகைகள் விதவிதமான செருப்புகளைம், ஹீல்ஸ்களைம் அணிகின்றனர். நடிகைகளின் கால்களை அலங்கரிக்கும் இந்த அழகு செருப்புகள் தங்கள் கால்களையும் அலங்கரித்தால் எப்படி இருக்கும்? என்று எணும் இன்றைய புதுமை விரும்பி பெண்கள், அந்த குறிப்பிட்ட மாடல் செருப்புகளை விரும்பிய கலரில் தேர்வு செய்து அணிந்து மகிழ்கிறார்கள்.
இன்றைய பெண்கள் பெரும்பாலும் பிளாட் (தட்டை வடிவம்) மற்றும் பாயின்ட்டட் வகை (ஹீல்ஸ் போன்ற மெல்லிய வடிவம்) காலணிகளையே அதிகம் தேர்வு செய்கிறார்கள்.