வாஷிங்டன்: அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7% ஆக இருக்கும் என உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- அடுத்த இரண்டு நிதியாண்டுகளுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 6.7% என்ற அளவில் நிலையானதாக இருக்கும்.
இந்த முன்னறிவிப்பு தெற்காசியாவின் மீட்சியில் இந்தியாவை ஒரு மீள் சக்தியாக நிலைநிறுத்துகிறது. இது வலுவான தனியார் நுகர்வு மற்றும் அரசு தலைமையிலான முயற்சிகளால் ஆதரிக்கப்படுகிறது. தெற்காசிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் வளர்ச்சிப் பாதை தனித்துவமானது.
தொழில்துறை செயல்பாடுகள் எதிர்பார்த்ததை விட கூர்மையான சரிவு காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைந்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச நாணய நிதியம் கூறுகையில், ‘உலகப் பொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது. 2023-ல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக இருந்தது. 2024-ல் 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த நிதியாண்டிலும் 6.5 சதவீதமாக இருக்கும். 2026-ம் ஆண்டிலும் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.