சென்னை: ஆரோக்கியமான பானங்களில் பலவற்றினைப் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் இளநீர் மற்றும் சியாவிதைகளைக் கொண்டு ஆரோக்கியமான பானங்கள் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானவை: இளநீர் – 1 கப், சியா விதைகள் – 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு – சிறிதளவு.
இளநீரில் சியா விதைகளைப் போட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்தால் இளநீர்- சியா பானம் ரெடி. உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை இந்த பானம் அளிக்கிறது. இளநீரில் உள்ள சத்துக்கள் மற்றும் சியா விதைகளின் சத்துக்கள் உடலுக்கு சேர்கிறது.
உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகவும் சிறந்த பானம். வாரத்திற்கு இருமுறையாவது இந்த பானத்தை சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேலும் உயர்த்தும்.