சென்னை: தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியாவுக்கு இல்லை, மூனுக்கு போகிறார். திமுக தான் ராக்கெட் ரெடி பண்ணிட்டு இருக்கு” என ஆதவ் அர்ஜுனா செம பதிலடி கொடுத்துள்ளார்.
தேர்தல் முடிந்த கையோடு உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் துபாய்க்கு கிளம்பிச் சென்றுவிட்டார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோடை வெப்பத்தை சமாளிக்க கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கே இளம்பெண்களையும், பொதுமக்களையும் சந்தித்த அவர் தவெக ஃபினிஷ் என்பது போல தனது டிரேட்மார்க் சிக்னலை காட்டிய வீடியோக்கள் நேற்று வைரலாகின. ஆஸ்திரேலியாவுக்குப் போறாரா விஜய்?: நடிகை த்ரிஷாவின் பிறந்தநாள் வரும் மே 4ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், விஜய் அவருடன் சேர்ந்துக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்குப் போகப் போகிறார் என எதிர் தரப்பினர் நெகட்டிவ் ஒன்றை செட் செய்து சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.
சில செய்தி சேனல்கள் இதை ஒரு கேள்வியாகவே ஆதவ் அர்ஜுனாவிடம் வைக்க அவர் தக் லைஃப் பதிலடியை கொடுத்துள்ளார். விஜய்: மே 4ம் தேதி விஜய் ஆஸ்திரேலியாவுக்குப் போகிறாரா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதும், “ஆஸ்திரேலியாவுக்கு இல்லை, மூனுக்கு போகிறார். திமுக தான் ராக்கெட் ரெடி பண்ணிட்டு இருக்கு” என ஆதவ் அர்ஜுனா சொன்னதுமே அந்த செய்தியாளர் ஆஃப் ஆகிவிட்டார்.